Srilanka History 2019

2k Exam

Contact Us

Name

Email *

Message *

முதலாவது விமானி இராவணன் என்பது உறுதி

முதலாவது விமானி இராவணன் என்பது உறுதி

உலகின் முதலாவது விமானி இராவணன் என்பது உறுதி

கற்பனை அல்ல; வரலாற்று உண்மை



ஆராய்ந்து நிரூபிப்போம் என்கிறார் அதிகாரி

உலகின் முதல் விமானியே இராவணன்தான் என்றும் இராவணன் பழங்காலத்தில் பயன்படுத்திய முறைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப் போவதாகவும் இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.  

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்துறை வல்லுநர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், புவியியல் அறிஞர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில்தான் 5,000ஆண்டுகளுக்கு முன்னதாகவே உலகின் முதல் விமான ஓட்டியாக இராவணன் திகழ்ந்தார் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இருப்பினும், இந்தியாவில் இருந்து இராமனின் மனைவி சீதையை இராவணன் கடத்தி வந்ததாகக் கூறப்படுவதை பலரும் இக்கருத்தரங்கில் ஏற்றுக் கொள்ளவில்லை. சீதையை இராவணன் கடத்தியதாகக் கூறுவது இந்திய இதிகாசங்கள்தான் என்றும் இக்கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டது.  


இலங்கை அண்மையில் 'ராவணா' என்று பெயரிடப்பட்ட செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் இராவணன் போற்றுதலுக்குரிய பேரரசராக இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறார்.திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்று, திருக்ேகாணேஸ்வரம் ஆலயம் போன்றவையெல்லாம் இராவணன் பெருமை கூறும் புனிதமான இடங்களாக தமிழர்களால் பார்க்கப்படுகின்றன. 

அதேபோன்று பண்டைய இலங்கையின் பெருமைக்குரிய மன்னனாக சிங்கள மக்கள் இன்றும் இராவணனைப் போற்றுகின்றனர். இராவணன் சிறந்த சிவபக்தன் என்று இலங்கையின் வரலாறு கூறுகின்றது. இந்திய காப்பியங்கள் சிலவும் கூட இராவணனை மகா பிராமணன் எனக் குறிப்பிடுகின்றன.  

கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கருத்தரங்கம் குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை விமானப் போக்குவரத்துத் துறை பிரதித் தலைவர் சஷி தனதுங்க "இராவணன்தான் உலகின் முதல் விமானி.

இது கற்பனையல்ல. வரலாற்று உண்மை. இராவணன் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதை விரைவில் நிரூபிப்போம்" என்று உறுதியாகக் கூறினார். 



No comments:

Post a Comment

எமது இணையத்தை பார்வையிட்டது நன்றிகள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..

Back To Top