Srilanka History 2019

2k Exam

Contact Us

Name

Email *

Message *

முகாமைத்தவம் என்றால் என்ன?

முகாமைத்தவம் என்றால் என்ன?

முகாமைத்தவம் என்றால் என்ன?



எல்லாத் தரப்பினரும் தமது வாழ்வுக் காலத்தில் பல்வேறு நிறுவனங்களோடு அல்லது ஒழுங்கமைப்புக்களோடு (organization) தொடர்புற வேண்டியேற்படும். பாடசாலை, விளையாட்டக் கழகம், சமய நிறுவனங்கள், நலன்புரிச் சங்கங்கள் போன்றவற்றை இதற்கான உதாரணங்களாகும்.

முதலாவதாக ஒழுங்கமைப்பு என்றால் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வோம். குறித்துரைக்கப்பட்ட நோக்கமொன்றினை அல்லது நோக்கங்களின் தொகுதியினை அடைந்து கொள்வதற்காக ஒன்றுக்க மேற்பட்ட நபர்கள் கட்டமைக்கப்பட்ட ஒரு முறையின் கீழ் இணைந்து செயற்படல் ஒழுங்கமைப்பு எனப்படுகின்றது. இதற்கான உதாரணமாக பாரிய அளவில் நடாத்தப்படும் ஒரு பொதுக் கம்பனியை குறிப்பிடலாம். இந்தக் கட்டமைப்பு என்ற இயல்பை விளையாட்டுத் திறன்களை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு விளையாட்டுக் கழகத்தில் காணமுடியாது

எந்தவொரு ஒழுங்கமைப்பிற்கும் அது நடாத்திச் செல்லப்படுவதற்கு ஏதேனும் நோக்கம் (Goal) அவசியம். நோக்கம் என்பது குறிப்பிட்ட ஒழுங்கமைப்பு அடையவேண்டும் என எதிர்பார்க்கின்ற எண்ணக் கருக்கள் அல்லது எதிர்பார்ப்புக்கள் ஆகும். இது ஒழுங்கமைப்புக்கு ஒழுங்கமைப்பு மாறுபடும். உதாரணமாக குறித்த ஒரு ஒழுங்கமைப்பின் நோக்கம் இலாபம் உழைத்தலாக இருக்கும். நலன்புரி ஒழுங்கமைப்பை பொறுத்தமட்டில் உறுப்பினர்களின் நலனோம்புதலையே அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றது ஆகவே எந்தவொரு ஒழுங்கமைப்பும் நோக்கம் இன்றி இருக்க முடியாது.

குறிக்கப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அனைத்து ஒழுங்கமைப்புக்களும் ஏதேனும் நிகழ்ச்சி நிரல் காணப்படும். அல்லது குறிப்பிட்ட ஒரு முறை காணப்படும். (Method) இத்தகைய நிகழ்ச்சி நிரல் ஒன்றினை திட்டம் (Plan) எனக் குறிப்பிட முடியும். நோக்கங்களை எவ்வாறு அடைவது என நிகழ்ச்சி நிரல் ஒன்று இல்லையெனில் அந்நோக்கங்களை வினைத்திறனாக அடைந்து கொள்ள முடியாது. எந்தவொரு நிறுவனத்திற்கும் நோக்கம் இருப்பதாகவும் அந்நோக்கங்களை அடைவதற்கு குறிப்பிட்ட திட்டம் அவசியம் எனவும் அறிவீர்கள். இதற்கு வளங்கள் (Resources) அவசியமாகின்றது. இவை மனித வளங்களாகவோ ஏனைய வளங்களாகவோ காணப்படலாம். பல்வேறு நிறுவனங்களுக்கிடையில் இடைத் தொடர்பு காணப்படுவதற்கு இவ்வளங்கள் காரணமாகின்றன. உதாரணமாக அப்பியாசப் புத்தகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் நடவடிக்கைகளில் கடதாசி உற்பத்தி செய்யும் அல்லது கடதாசியை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று பெருமளவில் தாக்கம் செலுத்தும்.

பல்வேறு வளங்களைக் கொண்டு ஒழுங்கமைப்புக்களின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான பொறுப்புடைய நபர்கள் அனைத்து ஒழுங்கமைப்புக்களிலும் காணப்படுவர். இவர்களை முகாமையாளர்கள் (Managers) எனக் குறிப்பிடலாம். ஆயினும் பல்வேறு ஒழுங்கமைப்புக்களில் முகாமைத்துவப் பணியில் ஈடுபடுவோரை முகாமையாளர் என்று அழைப்பதில்லை. உதாரணமாக அதிபர், இராணுவத் தளபதி , ஜனாதிபதி, பிரதமர், தர்மகர்த்தா போன்ற பதவிகள் அடிப்படையில் முகாமைத்துவம் என்றால் என்ன? என்பது பற்றி ஆராய்வொம்.

முகாமைத்தவம் என்றால் என்ன?
முகாமைத்தவம் என்பது தொடர்பில் பல்வேறு வரைவிலக்கணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இங்கு அவ் அனைத்து வரைவிலக்கணங்களையும் முன் வைப்பதை விட முகாமைத்துவம் தொடர்பில் சிறப்பான விளக்கத்தினை அளிக்கின்ற வரைவிலக்கணம் ஒன்றை அவதானிப்போம்.

"ஒழுங்கமைப்பு ஒன்றின் நோக்கங்களை வினைத்திறனாகவும், விளைதிறனாகவும் அடைந்து கொள்வதற்காக ஒழுங்கமைப்பின் மனித, நிதி, பௌதிக, தகவல் வளங்களை திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல் , வழிநடத்தல் என்பன முகாமைத்துவம் ஆகும்."

“Management is the process of planning , organizing , leading, and controlling organizations human , financial physical and information resources to achieve organizational goals in an efficient and effective manner”

வினைத்திறன் (Efficiency) 

ஒரு நிறுவனம் தனது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு வளங்களை எந்தளவிற்குச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளது என்பது தொடர்பான ஒரு அளவீடே வினைத்திறன் ஆகும். (A measure of how well resources are used to achieve a goal) அதாவது நிறுவனம் எவ்வாறு வளங்களை உச்சமாகப் பயன்படுத்தியுள்ளது என்பதாகும். இக் கணிப்பீட்டினூடாக நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் வளங்களை இழிவாக்கிக் கொள்ளலாம். வினைத்திறன் என்பதை செய்தனவற்றைப் சரியாகச் செய்தல் (Doing things right) என்றும் சுருக்கமாகக் குறிப்பிடலாம். 

விளை திறன்( Effectiveness)

நோக்கங்களின் தொடர்புத் தன்மை மற்றும் அவை அடையப் பெற்றுள்ள அளவு என்பவை தொடர்பான ஒரு அளவீடே விளைதிறன் எனப்படுகின்றது. (A measure of the appropriateness of the goals chosen and the degree to which they are achieved) ஒழுங்கமைப்பு ஒன்று விளைதிறன்மிக்கதா? என்பதை எவ்வாறு கண்டறியலாம் எனில் அவ் ஒழுங்கமைப்புத் தெரிவு செய்த நோக்கம் சிறப்பானதாகக் காணப்படல் வேண்டும் .

வினைத்திறன் மற்றும் விளைதிறனுக்கு இடையில் நெருக்கமான தொடர்பு காணப்படுகின்றது. விளைதிறனாக ஒரு கருமத்தைச் செய்வதற்கு (Doing things right) முன்பு சரியான கருமத்தைச் தெரிவு செய்ய வேண்டும் (Doing the right things) இதன் கருத்து சரியானதை தெரிவு செய்து அதனைச் சரியாகக் செய்ய வேண்டும் என்பதாகும்.

வளங்கள் (Resources) 
முகாமைத்துவம் என்றால் என்ன? என்பது பற்றிய விளக்கம் உங்களுக்கு இருக்கும். முகாமைத்துவச் செயன் முறையில் உள்ளிடுகளாக பயன்படுத்தப்படுபவை வளங்கள் ஆகும். வளங்களைப் பல்வேறு வகையில் வகைப்படுத்தப்படலாம். தற்காலத்தில் இவற்றை 5M வகைப்பாட்டில் பின்வருமாறு வகைப்படுத்துவர். அவையாவன 

Men - மனிதர் 
Material - மூலப்பொருள் 
Money - நிதி 
Methods - முறைமை 
Machinery - இயந்திரங்கள் 

இவ் வகைப்பாடானது தற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆயினும் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட வரைவிலக்கணத்தின்படி நிறுவனத்தின் வளங்களை இதற்கு மாறான ஒரு முறையிலேயே வகைப்படுத்தியிருந்தோம். 

முகாமைத்துவக் கருமங்கள் (Management process) 
முகாமைத்துவக் கருமங்களினூடாக அடைய எதிர்பார்க்கப்படும் பிரதான இலக்கு நிறுவனத்தின் வெளியீடு ஆகும். நிறுவன நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு வளங்களை முகாமைத்துவக் கருமங்களினுள் உட்படுத்தி இத்தகைய பணி இடம்பெறுகின்றது. முகாமைத்துவ செயன்முறை என்பது குறித்துரைக்கப்பட்ட ஒரு நுட்பத்தின் கீழ் நிறுவனக் கருமங்களை மேற் கொள்ளுதல் ஆகும்.

முகாமைத்துவ செயல் முறையில் உள்ளடங்கும் கருமங்களாக தற்காலத்தில் பின்வரும் நான்கு பிரதான கருமங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

1. திட்டமிடல் (Planning) 
2. ஒழுங்கமைத்தல்( Organizing) 
3. தலைமை வகித்தல்( Leading) 
4. கட்டுப்படுத்தல்( Controlling) 

தற்காலத்தில் சில நூல்களில் முகாமைத்துவக் கருமங்களை மேற்குறிப்பிட்ட கருமங்களுக்கு மாறாக வேறு வகையில் குறிப்பிடுகின்றனர். அதாவது திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல், (Directing) மற்றும் கட்டுப்படுத்தல் என்றவாறு வகைப்படுத்துவதோடு மேலும் சில நூல்களில் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், நெறிப்படுத்தல் , திணைக்களப்படுத்தல், (Staffing) கட்டுப்படுத்தல் எனவும் வகைப்படுத்துகின்றனர். மேற் குறிப்பிட்ட வகைப்பாடுகளில் எது சரியானது என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது. எவ்வாறெனினும் இன்று பெரும்பாலம் பயன்படுத்தப்படுகின்ற பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற வகைப்பாடாக முதற் குறிப்பிட்ட நான்கு முகாமைத்துவக் கருமங்களையே குறிப்பிடலாம்.

.திட்டமிடல்

திட்டமிடல் என்பது நிறுவனத்தின் நோக்கங்களை வரையறுத்துக் கொள்ளல் , அத்தகைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கப் பொருத்தமான வழி வகைகளை தீர்மானித்துக் கொள்ளல் ஆகும். (The process of establishing goals and a suitable course of action for achieving those goals) 

நிறுவனம் ஒன்ற குறிப்பிட்ட காலத்தின் பின் எத்தகைய நிலையில் காணப்பட வேண்டும்? அந்நிலைக்கு நிறுவனத்தைக் கொண்டு செல்வது எப்படி? போன்ற கேள்விகளுக்கான விடை திட்டமிடல் பணியினூடாக கிடைக்கின்றது. திட்டமிடல் என்பது மிக முக்கியமானதாகும். முகாமைத்துவப் பணிகளைப் பொறுத்தமட்டில் ஆரம்பப் பணியாகவும் காணப்படுகின்றது. இதற்க காரணம் திட்டமிடலினை அடிப்படையாகக் கொண்டே ஏனைய முகாமைத்துவக் கருமங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நிறுவனம் செல்ல வேண்டிய பாதை எது என்பதை வரையறுத்துக் கொள்வது திட்டமிடல் ஆகும். மேலும் எதிர்கால மாற்றங்கள் நிச்சயமற்ற தன்மைகளுக்கு சிறப்பாக முகங்கொடுப்பதற்கச் சிறந்த திட்டமிடல் அவசியமாகும்.

ஒழுங்கமைத்தல்(Organizing) 

திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு அனித வளங்களையும், ஏனைய பங்கீடு செய்தல், ஒழுங்குபடுத்தல், போன்ற பணிகளை உள்ளடக்கிய செயற்பாடு ஒழுங்கமைத்தலாகும். (the process of allocating and arranging human and non human resources so that plans can be carried out successfully) .

ஒழுங்கமைத்தல் என்பதை நிறுவனப் பணிகளுக்கும் நிறுவன வளங்களுக்கும் இடையில் தர்க்க ரீதியான தொடர்பை ஏந்படத்தல் எனவும் வரையறுக்கலாம்.

இங்கு ஊழியர்கள் மேற் கொள்ள வேண்டிய அனைத்தப் பணிகள் அப்பணிகளை மேற் கொள்வதற்கக் தேவையான அனைத்து வளங்கள், வசதிகள், கருவிகள், போன்றவை கருத்திற் கொள்ளப்படல் வேண்டும். இத்தகைய பணிகள் மற்றும் வளங்களை வகைப்படுத்துவது ஒழுங்கமைத்தலின் ஒரு பணியாகும். இவ்வாறு வகைப்படுத்தப்படும் பணிகளுக்கான (Tasks) பதவிகளை உருவாக்குதலும் அப்பதவிகளுக்கான அதிகாரம் (Authority) மற்றும் பொறுப்புக்களை (responsibilities) வரையறை செய்தலும் ஒழுங்கமைத்தலின் பிரதான பணிகளாகும். ஓழங்கமைத்தலினூடாக நிறுவனங்களில் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு பணிகளுக்கிடையிலான தொடர்பினை ஏற்படுத்தலும் ஒழுங்கமைத்தலின் பிரதான பணியாகும்.

தலைமை வகித்தல்

நிறுவனத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நிறுவனப் பணிகளை சிறப்பாக மேற் கொள்வதற்க தேவையான உள்ளாற்றலினை வழங்ககின்ற செயற்பாடு தலைமை வகித்தலாகும். (the process of influencing others in the work behaviors necessary to reach organizational goals) .

திட்டமொன்று உருவாக்கப்பட்ட பின் அது தொடர்பான நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு தேவையான பணிகளையும் பதவிகளையும் அதிகாரங்களையும் பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதால் மாத்திரம் குறிப்பிட்ட இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது. நிறுவன உறுப்பினர்களை ஒர குழுவாக ஒன்ற திரட்டுவதற்கு தலைமைத்துவப் பணி அவசியமாகின்றது. மனித வள முகாமைத்துவமே கடினமான ஒன்று எனப் பலர் கூறுவதுண்டு. சிறப்பான மானுடத் தொடர்பினை ஏற்படத்தவதற்கு ஊழியர்களுக்கான ஊக்குவிப்புக்கள் (motivation) சிறந்த தலைமைத்துவம் (Leadership) சரியான தொடர்பாடல் (Efficient communication) ஆகியவை அவசியமாகின்றது. 

கட்டுப்படுத்தல் (Controlling) 

எதிர்பார்க்கப்பட்ட நிறுவன இலக்குகளை உருவாக்கப்பட்ட நியமங்களுக்கு ஏற்றவாறு அடைதல் பற்றி கணிப்பீடு செய்தல் கட்டுப்படுத்தல் ஆகும். அதாவது நியமங்களுக்கம் உண்மையான செயல் நிறைவேற்றத்துக்கும் இடையிலான ஒப்பீடு ஆகும். (the process of regulating organizational activities so that actual performance confirms to expected organizational standard and goals) 

நிறுவனமொன்று தனது இலக்குகளை நோக்கிச் செயற்படும் அதேவேளை அவற்றின் செயற்றிறனையும் குறைபாடுகளையும் பரிசீலனை (monitor) செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் நிறுவனம் குறிப்பிட்ட இலக்குகளை அடையும் வகையில் செயற்படுத்தப்படகின்றதா? அதற்கான முகாமைத்துவப் பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதா? ஏன்பதை உறுதி செய்தல் வேண்டும். வெற்றிகரமான முகாமைத்துவம் ஒன்றுக்கு அவசியமான வினைத்திறன் மற்றும் விளைதிறன் என்பன தொடர்பில் கட்டுப்படுத்தல் பணி அவசியமாகின்றது.

முகாமைத்துவக் கருமங்களுக்கிடையிலான பரஸ்பர தொடர்பு

திட்டமிடல், ஒழுங்கமைத்தல், தலைமை வகித்தல், கட்டுப்படுத்தல், ஆகிய கருமங்களை நாம் தனித்தனியாக விளங்கிக் கொண்டோம். ஆயினும் பிரயோக ரீதியில் முகாமைத்துவப் பணிகளை தனித்தனியாக வேறுபடுத்தி அறிவது கடினம். இவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகவே காணப்படுகின்றன. மேலும் முகாமைத்தவப் பணி நிறைவேற மற்றைய பணி மேற் கொள்ளப்படும் என்ற நிலையை நடைமுறையில் காண முடியாது. அனைத்து முகாமைத்தவப் பணிகளும் ஒரே வேளையில் செயற்படவதைக் காணலாம்.

முகாமைத்துவத்தின் முக்கியத்துவம்

வளங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்துவதன}டாக நிறவன இலக்குகளை நிறவனம் உரியவாறு அடைந்த கொள்ளலாம். இதற்கான பிரதான ஊடகமே முகாமைத்தவம் என்பதையும் மேற்கூறிய விளக்கங்களினூடாக அறிந்திருப்பீர்கள். வளங்களின் உபயோகம் தொடர்பில் கடந்தகாலங்களைவிட தற்காலத்தில் முகாமைத்துவத்தின் பங்கு அளப்பரியாக மாறியுள்ளது. இதற்கான காரணங்களாக கடந்த காலத்தோடு வைத்து நோக்கும் போது ஒப்பீட்டளவில் தேவைகள் அதிகரித்துள்ளமையோடு வளங்கள் பற்றாக்குறையாக மாறியுள்ளன. இன்றைய சூழ்நிலையை பொறுத்த மட்டில் அருமையான வளங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்தல் முகாமைத்துவத்தின் பிரதான சவாலாக காணப்படுகின்றது. முகாமையாளருக்கு இது மட்டுமன்றி பல்வேறு சவால்களுக்கும் முகங் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் முகாமைத்துவத்தின் முக்கியத்தவமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 

முகாமையாளர்கள் எதிர் கொள்கின்ற ஏனைய சவால்கள் வருமாறு:
சர்வதேச ரீதியில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தல்: 

இவ்வாறு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக அதிகமான போட்டி ஏற்படுகிறது.

உயர்விளைதிரன் (Superior Efficiency) உயர்தரம்(High Quality), புத்தாக்கம்(Innovation) ஆகியவற்றின் ஊடாகப் போட்டியினை எதிர்கொள்ள முனைதல் .

செயல் நிறைவேற்றத்தினை அதிகரித்துக்கொள்ளும் அதேவேளை விழுமியங்களுக்கும் நிறைவான முக்கியத்துவமளித்தல் நிறுவனக் கடப்பாடாக மாறியுள்ளது. 

அடிக்கடி மாறுகின்ற ஊழியப்படையினை நிர்வகிக்கவேண்டிய சவால்.
புதிய தொழில்நுட்பங்களின் வருகை 

உலகப் பொருளாதார ஸ்திரமற்ற நிலை 

மேற்கூறிய சவால்களுக்கும் இன்றைய முகாமையாளர்கள் முகங்கொடுக்க வேண்டியவர்களாகக் காணப்படுகின்றனர். இதன் காரணமாக இன்றைய நிறுவனங்களைப் பொருத்தமட்டில் முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. 




No comments:

Post a Comment

எமது இணையத்தை பார்வையிட்டது நன்றிகள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..

Back To Top