Srilanka History 2019

2k Exam

Contact Us

Name

Email *

Message *

கடவுச்சீட்டு விநியோக நடைமுறை சட்டம்

கடவுச்சீட்டு விநியோக நடைமுறை சட்டம்

கடவுச்சீட்டு விநியோக நடைமுறையில் உயிர்மான தரவுகளை உள்ளடக்குதல் 

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டு விநியோகத்தின் போது கை விரலடையாளங்களை உயிர்மானத் தரவுகளாக கடவுச்சீட்டு விண்ணப்பதாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள இலங்கை அரசினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்திற்கு அமைய விண்ணப்பதாரிகளின் நிழற்படங்களை பெற்றுக்கொள்வதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறான ஏற்பாடுகளினால் இலங்கை கடவுச்சீட்டானது சர்வதேச அங்கீகாரத்துடனான பயண ஆவணமாக கருதப்படும்.


புதிய கடவுச்சீட்டு விநியோக நடைமுறை பற்றிய முக்கியமான விடயங்கள்.
விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல்

01. புதிய நடைமுறைக்கான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்யத்தக்கதாக திருத்தப்பட்ட K 35A விண்ணப்பப்படிவம் பயன்படுத்தப்படல் வேண்டும்.

02. இவ்விண்ணப்பப்படிவங்கள் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம், பிராந்திய அலுவலகங்களான கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா, மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் வலைத்தளமான www.immigration.gov.lk என்பவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

03. கை விரலடையாளங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியமையால் எல்லா விண்ணப்பதாரர்களும் தனிப்பட்ட ரீதியில் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்திற்கோ அல்லது பிராந்திய காரியாலயங்களுக்கோ வருகைத்தருதல் அவசியமாகும். 

 சர்வதேச தரத்தில் உறுதிச்செய்யப்பட்ட நிழற்படங்கள் அச்சிடப்பட்ட நிழற்படங்கள் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

01. எல்லா விண்ணப்பதாரர்களும் நாடெங்கிலுமுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் அல்லது திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் அதன் பிராந்திய காரியாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட நிலையங்களில் தமது நிழற்படங்களினைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். 

02. குறிப்பிட்ட புகைப்பட நிலையங்களினால் அச்சிடப்பட்ட நிழற்படங்கள் வழங்கப்படாது, உங்களது நிழற்படங்கள் புகைப்பட நிலையங்களினால் இணையத்தின் வாயிலாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தரவுத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். 

03. புகைப்பட நிலையங்களினால் வழங்கப்படும் புகைப்படம் பெற்றுக்கொண்டதற்கான அறிவித்தற் குறிப்பு விண்ணப்பப்படிவத்துடன் கட்டாயமாக சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். 

04.  அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களின் பெயர்ப்பட்டியல் செய்திப்பத்திரிகைகளிலும் எமது www.immigration.gov.lk இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்படும். அத்துடன் மாவட்டச் செயலகங்களிலும் பிரதேச செயலகங்களிலும் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.


கை விரலடையாளங்கள் 

01. 2015ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தஞ் செய்யப்பட்ட 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் சரத்துக்களுக்கு ஏற்ப 16 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் தமது கை விரலடையாளத்தினை வழங்குதல் அவசியமாகும்.  

கை விரலடையாளங்கள் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்திலும் பிராந்தியக் காரியாலயங்களிலுமே பெற்றுக்கொள்ளப்படும். 

02. 16 வயதிற்கு குறைந்த விண்ணப்பதாரர்கள் தமது கை விரலடையாளங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. 

03. கட்டாயம் 16 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் விபரங்கள் இனிமேல் அவர்களது பெற்றோரின் கடவுச்சீட்டுக்களில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதுடன் அவர்களுக்கு தனியான கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளல் அவசியமாகும். 

 மேலதிக தகவல்கள்: துரித இலக்கம் 1962 அல்லது தொலைபேசி இலக்கங்கள் 0115329200 / 0115329175



No comments:

Post a Comment

எமது இணையத்தை பார்வையிட்டது நன்றிகள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..

Back To Top