Srilanka History 2019

2k Exam

Contact Us

Name

Email *

Message *

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2014-2019

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2014-2019


இலங்கையின் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  2014-2019 




மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena,  சிங்களம்:  මෛත්‍රිපාල සිරිසේන) என்று அழைக்கப்படும்

பல்லேவத்தை கமரலாலாகே மைத்திரிபால யாப்பா சிறிசேன (பிறப்பு: 3 செப்டம்பர் 1951) இலங்கையின் 6ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் ஆவார்.

1989 இல் அரசியலில் நுழைந்த இவர் இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

1994 முதல் 2014 நவம்பர் வரை இலங்கை அமைச்சரவையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தார். பாதுகாப்புப் பதில் அமைச்சராகவும் இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

2014 நவம்பர் 21 அன்று அக்கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிக் கூட்டணியில் இணைந்தார். சனவரி 8, 2015 அன்று நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, புதிய சனநாயக முன்னணியின் சார்பில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராசபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


இலங்கை மக்களாட்சி சோசலிசக் குடியரசின் அரசுத்தலைவர் (President of Democratic Socialist Republic of Sri Lanka) அல்லது இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசியல் தலைவருமாவார். 

இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது. அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசுத்தலைவர் பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பதவியாக காணப்படுவதனால் அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. 
தற்போதய இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆவார்..



இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனாதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. 

தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது. 

இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. 

அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும். சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். 

நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. 

இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது. 2015.01.08 ஆம் திகதி நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில் இலங்கையின் 7ஆவது சனாதிபதியாக 51.28% வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிரிசேன சனாதிபதியாக 2015.01.09 இல் தெரிவுசெய்யப்பட்டார்.



No comments:

Post a Comment

எமது இணையத்தை பார்வையிட்டது நன்றிகள் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..

Back To Top